வீட்டின் பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரம் கொள்ளை: கொள்ளையர்கள் கைவரிசை

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரம் கொள்ளை: கொள்ளையர்கள் கைவரிசை
X
கொள்ளை நடந்த வீடு.
ராயக்கோட்டை ரயில்வே காலனியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி ராணி (வயது 58). ரயில்வே துறையில் கேங்மேன் ஆக 14 வருடமாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் இரண்டு மாத சம்பள பணத்தை ரூ.60 ஆயிரத்தை பீரோவில் பூட்டி வைத்துவிட்டு வழக்கம்போல் ராணி பணிக்காக நேற்று இரவு 8 மணி அளவில் சென்று விட்டார். இன்று காலை 5 மணிக்கு சென்று பார்க்கும் பொழுது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் முழுவதும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதைப் பார்த்து ராணி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக ராயக்கோட்டை காவல் நிலையத்திற்கு கொள்ளை சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. கொள்ளை நடந்து நான்கு மணி நேரம் வரை தகவல் தெரிந்தும் காவல்துறை சார்பில் சம்பவ இடத்தை பார்த்து விசாரணை செய்யவில்லை என்று பணத்தைப் பறிகொடுத்த ராணி வேதனை தெரிவித்தார். இக்கொள்ளை சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!