தங்கமணியின் மருமகன் தினேஷ் குமாரின் கல்குவாரியில் சோதனை

தங்கமணியின் மருமகன் தினேஷ் குமாரின் கல்குவாரியில் சோதனை
X

சோதனைக்குள்ளான கல் குவாரி

சூளகிரியில், முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மருமகன் தினேஷ் குமாருக்கு சொந்தமான கல்குவாரியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.

முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான நாமக்கல் ஈரோடு கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று அதிகாலை முதல், சோதனை நடத்தி வருகின்றனர் . முன்னாள் அமைச்சரின் வீடு, உறவினர்கள், நண்பர்கள் என பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்

அவ்வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள அத்திமுகம் பகுதிகளில், முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மருமகன் தினேஷ் குமாருக்கு சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இதில் ஜல்லி, எம் சேன்ட், பி சேன்ட் அதிக அளவில் தயாரிக்கபட்டு, கர்நாடக மாநிலத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலை பல ஏக்கர் நிலபரப்பில் செயல்பட்டு வருகிறது.

இந்த தொழிற்சாலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் .இந்த தொழிற்சாலையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அதை சரிபார்க்கும் பணியில் லஞ்சம் ஒழிப்பு போலீசார் ஈட்டுப்பட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இந்த பகுதி காலை முதலே பரபரப்பாக காணபடுகிறது.போலீசார் குவிக்கபட்டு சோதனைகள் நடைபெற்று வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!