சூளகிரியில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் மூட்டைகளாக கொட்டப்படும் கோழிக் கழிவுகள்

சூளகிரியில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் மூட்டைகளாக கொட்டப்படும் கோழிக் கழிவுகள்
X

சூளகிரி தேசிய நெடுஞ்சாலை அருகே மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டுள்ள கோழி கழிவுகள். 

சூளகிரியில் தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் மூட்டைகளாக கொட்டப்படும் கோழி கழிவுகளால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தேசிய நெடுஞ்சாலை அருகே மூட்டை மூட்டையாக கொட்டப்படும் கோழி கழிவுகள் துர்நாற்றம் வீசும் நிலையிலும் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் செயல்பட்டு வருகிறது. இறைச்சிகளை சுத்தம் செய்யப்படும் போது கழிவுகளை மூட்டைகளாக கட்டப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் கொட்டப்படுகிறது. இதனால் பல நோய் தொற்றுகள் பரவ வாய்ப்புள்ளதாக பொதுமக்களும், அவ்வழியாக செல்லும் பயணிகளும் தெரிவிக்கின்றனர்.

நோய் தொற்று ஏற்ப்படும் வகையில் கோழி கழிவுகளை கொட்டும் கடை உரிமையாளர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!