சூளகிரி அருகே அனுமதியின்றி எருதுவிடும் விழா 750 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

சூளகிரி அருகே அனுமதியின்றி எருதுவிடும் விழா 750 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
X

திருமலகவுனிக்கோட்டா கிராமத்தில் மாட்டுப்பொங்கலை ஒட்டி நடைபெற்ற எருதுவிடும் விழா.

சூளகிரி அருகே அனுமதியின்றி எருதுவிடும் விழா நடத்தியதாக 750 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள திருமலகவுனிக்கோட்டா கிராமத்தில் மாட்டுப்பொங்கலை ஒட்டி நேற்று அனுமதி இல்லாமல் மாபெரும் எருதுவிடும் விழா நடைப்பெற்றது.

இதில் சூளகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 400க்கும் அதிகமான காளை மாடுகள்,அலங்கரித்து வரப்பட்டு வாடி வாசலில் ஒவ்வொன்றாக அவிழ்ந்து விடப்பட்டன.

கட்டுக்கடங்காத இளைஞர்களுக்கு மத்தியில் கொம்புகளில் வண்ண தடுக்கைகளை கட்டிக்கொண்ட காளை மாடுகள் சீறி பாய்ந்தன. நேருக்குநேர் வந்த காளைகளை அடக்க இளைஞர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு அடக்கினர்.

இதில் காளைகள் முட்டியதில் 10க்கும் மேற்ப்பட்ட பார்வையாளர்கள் காயமடைந்தனர். அனுமதி இல்லாமல் நடைபெற்ற இந்த மாபெரும் எருதுவிடும் விழாவில் 4000த்திற்கும் அதிகமானோர் பங்கேற்றிருந்தனர்.

இந்நிலையில் சூளகிரி போலீசார் தடையை மீறி அதிகமாக கூட்டம் சேர்த்தது, திருவிழா நடத்தியது என இரண்டு பிரிவின் கீழ் 750 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai and smart homes of future