கர்நாடகாவிற்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி, 2 வாகனங்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரியில் இருந்து கர்நாடகாவிற்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி மற்றும் எஸ்.ஐ.க்கள் சிவசாமி, தென்னரசு ஆகியோர், கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், குருபரப்பள்ளி மேம்பாலத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த பிக்அப் வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.

இதில், ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வேனை ஓட்டி வந்த கர்நாடகா மாநிலம் பங்காருபேட்டையை சேர்ந்த ஆரோஅள்ளி பகுதியை சேர்ந்த ராமு(26) என்பவரை கைது செய்து, ரேஷன் அரிசி மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும், ரேஷன் அரிசினை பொதுமக்களிடம் வாங்கி கொடுத்த திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சமலேரிமுத்தூர் பகுதியை சேர்ந்த அருள் என்பவரை தேடி வருகின்றனர்.

இதே போல், பாகலூர் - சர்ஜாபூர் சாலையில் ஆம்னி வேனில், 1100 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி கர்நாடகாவில் அதிக விலைக்கு விற்று வந்த கும்பலைச் சேர்ந்த, கர்நாடகா மாநிலம், பங்காருபேட்டையை ஆரோஅள்ளி பகுதியை சேர்ந்த மஞ்சுநாத்(33), யஷ்வந்த்பூர் நாகேஷ் ஆகியோரை கைது செய்து அரிசி, ஆம்னி வேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture