சூளகிரி அருகே சின்னாறு அணையில் மூழ்கி மாமியார், மருமகன் சாவு

சூளகிரி அருகே சின்னாறு அணையில் மூழ்கி மாமியார், மருமகன் சாவு
X
பைல் படம்.
சூளகிரி அருகே சின்னாறு அணையில் மூழ்கி மாமியார், மருமகன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி டி.கே.நகரைச் சேர்ந்தவர் பஸ்லூன். இவரது மகள் முஸ்கான். இவருக்கும் பெங்களூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான சமீர் என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு திருமணம் நடந்தது. இந்நிலையில் சமீர் இன்று தனது மனைவியுடன் சூளகிரியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு வந்திருந்தார்.

பின்னர், குடும்பத்துடன் சேர்ந்து சமீர் சூளகிரி அருகே உள்ள சின்னாறு அணைக்கு சென்றார். அணையில் ஒரமாக சமீர் குளித்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கினார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பஷ்லூன், சமீரை காப்பாற்ற தண்ணீரில் குதித்துள்ளார். சிறிது நேரத்தில் இருவரும் தண்ணீரில் மூழ்கியதை கண்ட குடும்பத்தினர் கூச்சலிட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த சூளகிரி இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீஸார், மீன்பிடிக்கும் தொழிலாளர்களின் உதவியுடன் நீரில் மூழ்கிய 2 பேரையும் சடலங்களை மீட்டனர். மேலும், சடலங்களை உடற்கூறு ஆய்விற்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக சூளகிரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்