சூளகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொசு மருந்து தெளிப்பு

சூளகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொசு மருந்து தெளிப்பு
X

சூளகிரி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டெங்கு பரவலை தடுக்க கொசு மருந்து தெளிக்கபட்டது.

சூளகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையாக கொசு மருந்து தெளிக்கப்பட்டது.

டெங்கு என்பது கொசுக்களால் பரவும் ஒரு வைரஸ் நோயாகும். இது சமீபத்திய ஆண்டுகளில் உலகின் பல்வேறு பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது.

டெங்கு வைரஸ் குறிப்பாக ஏடிஸ் அல்போபிக்டஸ் என்ற கொசுக்கள் மூலமே பரவி வருகிறது. ஏடிஸ் இனத்தின் பெண் கொசுக்களால் இந்த டெங்கு வைரஸ் பரவுகிறது. மேலும் இந்த கொசுக்கள் தான் சிக்குன்குனியா, மஞ்சள் காய்ச்சல் மற்றும் ஜிகா வைரஸ் போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

டெங்கு வைரஸ் தொற்று சிலருக்கு அறிகுறிகள் இல்லாத பாதிப்புகளை ஏற்படுத்துகிறது, அதே நேரத்தில் சிலர் கடுமையான காய்ச்சல் போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் கடுமையான பாதிப்புகள் ஏற்படுகிறது.

தொடர்மழை காரணமாக கொசு உற்பத்தி அதிகமாகவும் நிலையில் டெங்கு காய்ச்சல் உருவாக வாய்ப்புள்ள நிலையில், தற்போது முன் எச்சரிக்கையாக பல மாவட்ட சுகாதாரத்துறை துறை நடவடிக்கைகளும் விழிப்புணர்வும் ஏற்ப்படுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியான சூளகிரி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டெங்கு பரவலை தடுக்க கொசு மருந்து தெளிக்கபட்டது

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!