சூளகிரி அருகே 20க்கும் மேற்பட்ட காட்டு யானை கூட்டம்: கிராம மக்களுக்கு எச்சரிக்கை

சூளகிரி அருகே 20க்கும் மேற்பட்ட காட்டு யானை கூட்டம்: கிராம மக்களுக்கு எச்சரிக்கை
X

சூளகிரி அருகே தஞ்மடைந்த யானைகள் கூட்டம்.

சூளகிரி அருகே 20க்கும் மேற்பட்ட காட்டு யானை கூட்டம் தஞ்சமடைந்ததால் கிராம மக்களுக்கு தண்டோரா மூலம் வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த ஊடேதுர்க்கம் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய 20 க்கும் மேற்ப்பட்ட காட்டுயானைகள் இன்று அதிகாலை சானமாவு வனப்பகுதிக்கு வந்து தஞ்சமடைந்துள்ளது.

இதன் காரணமாக பீர்ஜேப்பள்ளி, கொம்பே பள்ளி, நாயகனப்பள்ளி, ராமாபுரம் ஆகிய கிராம விவசாயிகள் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு வனத்துறையினர் தண்டூரா மற்றும் ஒலிபெருக்கி மூலம் வனத்துறையினர் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காரணமாக யானைகள் இருப்பது கூட கண்களுக்கு தெரியாது. எனவே நன்றாக வெளிச்சம் தென்பட்ட பிறகு வயல்வெளிக்கு செல்லவும். அதேசமயம் இரவு நேரங்களில் விவசாய தோட்டங்களில் காவல் காக்கும் போது எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!