சூளகிரி அருகே கொட்டும் மழையில் எம்எல்ஏ கே.பி.முனுசாமி ஆய்வு
துரை ஏரி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட வேப்பனஹள்ளி எம்எல்ஏவும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணையிலிருந்து இடதுபுற பிரதான கால்வாய் மூலம் உபரி நீர் துரை ஏரிக்கும், அங்கிருந்து கால்வாய்கள் அமைத்து சின்னார் அணைக்கும் நீர் கொண்டு செல்ல வேண்டுமென்பது விவசாயிகளின் நீண்டநாள் கனவாக உள்ளது.
தற்போது அணைகள் நிரம்பி, உபரி நீர் வீணாகும் சூழலில் விவசாயிகளின் கோரிக்கை ஏற்று வேப்பனஹள்ளி எம்எல்ஏவும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி, துரை ஏரி உள்ளிட்ட பகுதிகளில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
கெலவரப்பள்ளி அணையின் உபரி நீர் வரக்கூடிய மருதாண்டப்பள்ளி, வரதாபுரம் உள்ளிட்ட ஏரிகளை பார்வையிட்ட அவர், துரை ஏரியிலிருந்து சின்னார் அணைக்கு செல்லக்கூடிய கால்வாய்கள் சீரமைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
கால்வாய் செல்லக்கூடிய வழியில் இருந்த பட்டா நிலத்தின் உரிமையாளரிடம் பொதுமக்களின் நலனிற்காக 11 அடி அகலத்தில் கால்வாய் அமைக்க அனுமதி பெற்று தந்தார்.
ஏறக்குறைய சூளகிரி பகுதி மக்களின் கனவு நிறைவேற்ற ஆயத்தமாகியுள்ள நிலையில், கொட்டும் மழையிலும் மக்களுக்கு சேவையாற்ற வந்த எம்எல்ஏ கே.பி.முனுசாமியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu