தாழ்வான மின் கம்பியை தூக்க முயன்ற லாரி கிளீனர்: மின்சாரம் தாக்கி பரிதாப சாவு

தாழ்வான மின் கம்பியை தூக்க முயன்ற லாரி கிளீனர்: மின்சாரம் தாக்கி பரிதாப சாவு
X

உயிரிழந்த கிளீனர் வந்த லாரி.

சூளகிரி அருகே தாழ்வாக சென்ற மின் கம்பியை தூக்க முயன்ற ராஜஸ்தானை சேர்ந்த லாரி கிளீனர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே குக்கலப்பள்ளி கிராமத்தில் இயங்கி வரும் தனியார் கிரானைட் கம்பெனிக்கு கண்டெய்னர் லாரியில் கிரேன் கொண்டு செல்லும்போது, அந்த பகுதியில் தாழ்வாக சென்ற மின்கம்பியால் லாரி செல்ல இடையூறாக இருந்துள்ளது.

இதையடுத்து ராஜஸ்தான் பகுதியை சேர்ந்த லாரி கிளீனர் சங்கர்லால் (வயது 55) தடுப்பு கட்டையால் மின்கம்பியை தூக்கியபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூளகிரி போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தர். இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!