கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் 65 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பல்வேறு துறைகளில் 65 பேர் பணி நியனம் செய்ய தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லூரியின் முதல்வர் டாக்டர். அசோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு மக்கள் நல்வாழ்வுதுறை ஆணைப்படி ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு துறைகளுக்கு பணி நியமனம் செய்யப்படவுள்ளது.
அதன்படி அரசு, அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சி.ஆர்.ஏ., கோர்ஸ் முடித்த 5 பேர் நுண்கதிர் வீச்சாளராகவும், டையாலிசீயஸ் முடித்த 15 பேர் டையாலிசீயஸ் டெக்னீசியனாகவும், அதேபோல சி.டி ஸ்கேன் டெக்னீசியன் 5 பேர், மயக்கவியல் நிபுணர் 15 பேர், ஆய்வுக்கூட நுட்புநர் 5 பேர், டி.பார்ம்., முடித்த மருந்தாளுநர் 5 பேர், தமிழில் எழுத படிக்க தெரிந்த பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் 15 பேர் என மொத்தம் 65 பேர் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டு முறைகளின்படி பணி நியமனம் செய்யப்படவுள்ளனர்.
இது தற்காலிக பணிநியமனமாகும். பணிநியமனம் செய்யப்பட்டவர்கள் ஆறு மாதங்களுக்கு பின் பணிநீக்கம் செய்யப்படுவர். விருப்பமுள்ள மற்றும் தகுதியான நபர்கள் விண்ணப்பம் மற்றும் தகுதி சான்றுகளை முதல்வர் மற்றும் சிறப்பு அலுவலர், அரசு கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, காந்தி ரோடு, கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு வருகிற 10 ம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பி வைக்கலாம். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கல்லூரி முதல்வர் டாக்டர்.அசோகன் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu