கிருஷ்ணகிரி: வாகனத்தை வழிமறித்து லஞ்சம் - தலைமை காவலர் சஸ்பெண்ட்

கிருஷ்ணகிரி: வாகனத்தை வழிமறித்து லஞ்சம் - தலைமை காவலர் சஸ்பெண்ட்
X

குருபரப்பள்ளி அருகே குட்கா வாகனத்தை வழிமறித்து லஞ்சம் வாங்கிய புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட தலைமை காவலர் மதியழகன். 

குருபரப்பள்ளி அருகே குட்கா வாகனத்தை வழிமறித்து லஞ்சம் வாங்கிய தலைமை காவலரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி காவல் நிலைய தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் மதியழகன் . இவர், வாகனச்சோதனையின் போது குட்கா வாகனத்தை வழி மறித்து விசாரித்துள்ளார். குட்கா தொடர்பாக வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க, ரூ. 2.5 லட்சம் பணம், லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்துமாறு, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் உத்தரவிட்டார். அவருடைய உத்தரவின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், தலைமை காவலர் மதியழகன் பணம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, நேற்று அவர் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், இன்று அவரை பணியிடை நீக்கம் செய்து, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் உத்தரவிட்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!