சூளகிரி அருகே இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

சூளகிரி  அருகே இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பறிமுதல்
X

குட்கா பொருட்கள் கடத்தியதாக பறிமுதல் செய்யப்பட்ட வேன்.

சூளகிரி அருகே போலீசாரின் வாகன சோதனையில் இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே காமன்தோட்டியில் சூளகிரி போலீசார் வாகன தணிக்கையில் ஈட்டுப்பட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி வேண் நிறுத்தி சோதனை செய்தபோது வெங்காய முட்டைகளுக்கு அடியில் தடைசெய்யப்பட்ட குட்கா பான் மசாலா பொருட்களை மறைத்து வைத்து கொண்டு வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் மறைத்து கொண்டு வரப்பட்ட சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள 250 கிலோ குட்கா பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணையில் பெங்களூர் பீன்யா பகுதியை சேர்ந்த மஞ்சுநாத் என்றும், பெங்களூரில் உள்ள மெஜஸ்டிக்கில் இருந்து கோயம்புத்தூருக்கு தடைசெய்யப்பட்ட குட்கா பான் மசாலா பொருட்கள் கொண்டு செல்வது தெரிய வந்தது. இதையடுத்து ஓட்டுநரை கைது செய்த போலீசார் வேனை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!