வாரச்சந்தை நடத்த அரசு அனுமதிக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

வாரச்சந்தை நடத்த அரசு அனுமதிக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை
X

புளியந்தோப்பு பகுதியில் குவிந்த ஆடு வியாபாரிகள்.

வாரச்சந்தை நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி தொகுதிக்கு உட்பட்ட குந்தாரப்பள்ளியில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் நடக்கும் வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை அதிக அளவில் நடந்து வந்தது. இந்த சந்தைக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் வருவது வழக்கம். தற்போது கொரோனா ஊரடங்கால் சந்தை கூடுவதற்கு அரசு தடை விதித்துள்ளது. இதனால் சந்தைக்கு அருகில் உள்ள சாலையோரங்களை விவசாயிகள் தாங்கள் வளர்த்து வந்த ஆடுகள், மாடுகள் மற்றும் கோழிகளை விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில், இன்று வாரச்சந்தை அருகில் உள்ள புளியந்தோப்பில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விற்பனையாளர்கள் ஆடுகளை வாங்க குவிந்தனர். தற்போது ஊரடங்களில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளதால், வாரச்சந்தை நடப்பதற்கு அரசு அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்