வேப்பனப்பள்ளி வனப்பகுதியில் 3 கரடி தாக்கி ஆடு மேய்த்தவர் படுகாயம்

வேப்பனப்பள்ளி வனப்பகுதியில் 3 கரடி தாக்கி ஆடு மேய்த்தவர் படுகாயம்
X

கரடிகள் தாக்கியதில் காயமடைந்த சீனிவாசன்.

வேப்பனப்பள்ளி வனப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர் மீது 3 கரடி தாக்கியதில் படுகாயமடைந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே புதிமுட்லு கிராமத்தின் அருகிலுள்ள வனபகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்த சினிவாசன் (56) என்பவரை 3 கரடிகள் திடிரென்று தாக்கியுள்ளது. இதில் சீனிவாசன் தலை கை கால் பகுதிகளில் கரடிகள் கடித்ததில் படுகாயம் அடைந்துள்ளார்.

மேலும் இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கபக்கம் விவாசாயிகள் ஓடி வந்து படுகாயம் அடைந்திருந்த சினிவாசனை கரடிகளிடம் இருந்து காப்பாற்றி வேப்பனப்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதட்டத்தை எற்படுத்திவுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!