முன்னாள் திமுக பஞ்., தலைவி கணவரின் மண்டை உடைப்பு

முன்னாள் திமுக பஞ்., தலைவி கணவரின் மண்டை உடைப்பு
X

கிராம பொதுமக்களுடன் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகாரளித்த முன்னாள் திமுக பஞ்., தலைவியின் கணவர்.

குருபரப்பள்ளியில் பொது வழிப்பாதை பிரச்சனையில் மண்டை உடைப்புக்கு நீதிகேட்டு முன்னாள் திமுக பஞ்சாயத்து தலைவி கணவர்ன் எஸ்.பியிடம் புகாரளித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி பஞ்சாயத்து தலைவியாக இருந்தவர் திமுகவை சேர்ந்த ஜெயலட்சுமி. இவரது கணவர் மணி(எ)சுப்பிரமணி(49). இவர் கிராம பொதுமக்களுடன் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில், குருபரபள்ளி அம்மன் நகரில் உள்ள 12அடி அகல பொது வழிப்பாதையில் பொதுமக்கள் நீண்ட காலமாக சென்று வருகின்றனர். ஆனால் கோவிந்தராஜ் என்பவர் அந்த இடத்தில் 7 அடியை ஆக்கிரமித்து கட்டடம் கட்டியுள்ளார். இது குறித்து கடந்த 18ம் தேதி நான் பொதுமக்களுடன் சென்று கேட்ட போது தகராறு ஏற்பட்டத்தில், என் மண்டையை உடைத்துவிட்டனர்.

நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். மேலும் இது குறித்து குருபரப்பள்ளி போலீசில் புகார் தெரிவித்தேன். ஆனால் கோவிந்தராஜ் அதிமுகவை சேர்ந்தவர் என்பதால், போலீசார் எந்த விசாரணையும் நடத்தவில்லை. எனவே பொது வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றி, என் மண்டையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து கோவிந்தராஜிடம் கேட்ட போது, 12 அடி பொது வழிப்பாதை என்னுடைய பட்டா நிலம் ஆகும். அதற்கு பொதுமக்கள் பணம் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால் பணம் தரவில்லை. இதனால் என்னுடைய 12 அடி இடத்தில் நான் 7 அடியை சேர்த்து கட்டடம் கட்டியுள்ளேன் என்றார்.

Tags

Next Story