சூளகிரியில் முப்படை தளபதிக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் மலரஞ்சலி

சூளகிரியில்  முப்படை தளபதிக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் மலரஞ்சலி
X

சூளகிரி ரவுண்டானாவில் முன்னாள் ராணுவ வீரர்கள் இணைந்து பிபின் ராவத் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தினர்.

சூளகிரியில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதிக்கு முன்னாள் இராணுவ வீரர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் வானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நேற்று விபத்துக்குள்ளானது.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் சக வீரர்கள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில் அவருடைய திருவுருவப் படத்திற்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டுவரும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ரவுண்டானாவில் கேப்டன் கிருஷ்ணன் தலைமையில் முன்னாள் ராணுவ வீரர்கள் இணைந்து பிபின் ராவத் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தினர்.

இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் சூளகிரி போலீசார், அரசு பள்ளி ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மவுனம் அஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!