கிருஷ்ணகிரியில் ஆந்திர முன்னாள் முதல்வர் சிலை கடத்தல்: போலீசார் குவிப்பு

கிருஷ்ணகிரியில் ஆந்திர முன்னாள் முதல்வர் சிலை கடத்தல்: போலீசார் குவிப்பு
X

ஒ.என்.கொத்தூர்  கிராமத்தில் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ராஜசேகர் ரெட்டியின் திருவுருவ சிலை அமைக்கப்பட்ட இடம்.

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ராஜசேகர் ரெட்டி திருவுருவச்சிலையை அகற்றி மர்மநபர்கள் கடத்தி சென்றதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தமிழக - ஆந்திர மாநில எல்லையோரம் உள்ளது ஒ.என்.கொத்தூர் கிராமம். இந்த கிராமத்தில் முன்னாள் முதலமைச்சர் ராஜசேகர் ரெட்டியின் திருவுருவ சிலை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்த நிலையில் அதனை பயன்படுத்தி மர்ம கும்பல் முன்னாள் முதலமைச்சர் ராஜசேகர் ரெட்டியின் திருவுருவ சிலையை அகற்றி அதனை கடத்திச் சென்றது. இதை அறிந்த அப்பகுதி கிராம மக்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் முன்னாள் முதலமைச்சர் சிலை அகற்றி சென்ற சம்பவத்தில் தெலுங்கு சேத மக்கள் கட்சி மீது சந்தேகம் உள்ளதாக கிராமமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதனையடுத்து அங்கு பரபரப்பும் பதற்றமும் நிலவுகிறது. போலீஸார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!