சூளகிரி அருகே 41 இருசக்கர வாகனங்களை திருடிய 5 பேர் கைது

சூளகிரி அருகே  41 இருசக்கர வாகனங்களை திருடிய 5 பேர் கைது
X

கைது செய்யப்பட்ட 5 பேர்.

சூளகிரி அருகே 41 இருசக்கர வாகனங்களை திருடியதாக 5 பேரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி காவல் நிலையத்திற்க்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஒரு வருடமாக தொடர் இருசக்கர திருட்டு சம்பவம் அரங்கேரி வந்தது. இந்த தொடர் குற்ற சம்பவங்களை இதைதடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் காவல் ஆய்வாளர் மனேகரன் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு திருட்டு சம்பவங்களை கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் சூளகிரி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டு திருப்பட்ட வாகனங்களை தேடி வந்த போலிசார் விசாரனையில் 5 பேர் கொண்ட கும்பல் இந்த தொடர் இருசக்கர வாகன திருட்டை செய்து வருவது தெரியவந்தது.

இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டம், பருகூரை சேர்ந்த தட்சணமூர்த்தி 26, வாணியம்பாடியை சேர்ந்த அரசன் 24, சந்தோஷ் 19, சதீஷ் 24 மற்றும் வேலூரை சேர்ந்த திருவெங்கடம் 31 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து திருடப்பட்ட மதிப்புமிக்க 41 இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்த போலிசார் மீட்கப்பட்ட சக்கர வாகனங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர்.

Tags

Next Story
ai based agriculture in india