கிருஷ்ணகிரி அருகே ஒற்றை காட்டு யானை தாக்கி விவசாயிகள் சாவு
யானை தாக்கி உயிரிழந்த சந்திரசேகரன், நாகராஜப்பா.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த நேரலகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர் அதே பகுதியில் வனப்பகுதியை ஒட்டியுள்ள தனது விவசாய தோட்டத்தில் தக்காளி பயிரிட்டுள்ளார். இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் இடமிருந்து தக்காளி தோட்டத்தை பாதுகாக்க நேற்று இரவு தனது விவசாய நிலத்தில் அவர் காவலுக்கு இருந்துள்ளார்.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்குள் வந்த ஒற்றை காட்டு யானை எப்ரி வழியாக நேரலகிரி பகுதிக்கு வந்துள்ளது. அப்போது தக்காளி தோட்டத்தில் காவலுக்கு இருந்த சந்திரசேகரன் காட்டு யானை தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து அந்த ஒற்றை காட்டு யானை அருகிலுள்ள சிகரமானபள்ளி கிராமத்தில் உள்ள விவசாய தோட்டத்திற்கு சென்றுள்ளது. அங்கு விவசாய நிலத்தில் காவலுக்கு இருந்த விவசாயி நாகராஜப்பா என்பவரையும் ஒன்றை காட்டு யானை தாக்கி கொன்றது. பின்னர் அந்த யானை சூளகிரி பகுதியில் உள்ள கரியானபள்ளி வனப்பகுதிக்குள் சென்று முகாமிட்டுள்ளது.
இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரண தொகை வழங்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் யாரும் வனப்பகுதியை ஒட்டி செல்ல வேண்டாம் எனவும் வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu