குடிபோதையில் எலி மருந்தை குடித்த முன்னாள் ராணுவ வீரர் பலி

குடிபோதையில் எலி மருந்தை குடித்த முன்னாள் ராணுவ வீரர் பலி
X

பைல் படம்.

மகாராஜகடை அருகே குடிபோதையில் எலி மருந்தை குடித்த முன்னாள் ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜகடை அடுத்த காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். 69 வயது முதியவரான இவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. வழக்கம் போல் கடந்த 14ஆம் தேதி காட்டூர் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் மது அருந்தி விட்டு போதை தலைக்கேறிய நிலையில் வீட்டில் இருந்த எலி மருந்தை குடித்துள்ளார். இவரை சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் புஷ்பராஜ் கொடுத்த புகாரின் பேரில் மகாராஜகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா இன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!