சூளகிரியில் குடிநீர்த்தட்டுப்பாடு: செல்லக்குமார் எம்பி நேரில் ஆய்வு

சூளகிரியில் குடிநீர்த்தட்டுப்பாடு: செல்லக்குமார் எம்பி நேரில் ஆய்வு
X

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர்த்தட்டுப்பாடு குறித்து மக்களவை உறுப்பினர் செல்லக்குமார் நேரில் ஆய்வு செய்தார்.

சூளகிரி கலைஞர் காலனியில் ஒரு மாதமாக சீரான குடிநீர் விநியோகம் இல்லை என மக்களவை உறுப்பினர் செல்லக்குமாரிடம் மக்கள் புகார்

சூளகிரி கலைஞர் காலனியில் சீரான குடிநீர்யின்றி ஒரு மாதத்திற்கு மேலாக மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் மக்களவை உறுப்பினர் செல்லக்குமார் அப்பகுதியை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் கீழ்த்தெருவில் உள்ள கலைஞர் காலனி பகுதியில் சுமார் 100 குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் சாலை, கால்வாய், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

குறிப்பாக இந்த பகுதியில் கடந்த 1 மாத்திற்கும் மேலாக தண்ணீர் வினியோகம் பாதிக்கப்பட்டதால் மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகியுள்ளார். ஒரு மாதத்திற்கு முன்பு வரை வாரம் ஒரு முறையாவது தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், ஒரு மாதத்திற்கு முன்பு இங்கு மத்திய அரசின் ஜல்சக்தி அபியன் திட்டத்தின் கீழ் புதிய குழாய் பதித்து குடிநீர் விநியோகம் துவங்கியதாக கூறப்படுகிறது. அதன் பிறகு தற்போது வரையும் முழுமையாக தண்ணீர் விநியோகம் இன்றி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் தண்ணீரை அதிக விலைக்கு வாங்கி அவர்கள் பயன்படுத்தும் நிலை நீடிப்பதாகவும் கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி அண்மையில் சாலை மறியலில் ஈடுபட்டபோதும் எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர் செல்லக்குமார் அந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து தரமற்ற முறையில் குடிநீர் குழாய் பதித்துள்ள ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுத்து இந்த பகுதியில் விரைவில் புதிய குழாய் அமைத்து குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil