வேப்பனஹள்ளி திமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு

வேப்பனஹள்ளி திமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு
X
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் முருகன் எம்எல்ஏ.,விற்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் முருகன் எம்எல்ஏ., தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் நேற்று, மகாராஜகடை, நாரலப்பள்ளி, சிந்தகம்பள்ளி, கோதிகுட்டலப்பள்ளி, மேகலசின்னம்பள்ளி, நலகொண்டலப்பள்ளி, கோணேகவுண்டனூர் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரசாரம் செய்தார்.

அப்போது அவருக்கு பட்டாசு வெடித்தும், மாலை அணிவித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் பேசுகையில்,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றவுடன் நிறுத்தப்பட்டுள்ள முதியோர் உதவித்தொகை உடனடியாக மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பகுதிகளில் சுகாதாரமான குடிநீர் வழங்கப்படும். வறண்ட ஏரிகள் தூர்வாரப்பட்டு, அனைத்து ஏரிகளையும் இணைத்திட உரிய நடவடிக்கை எடுப்பேன்.

மேலும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துவேன். உங்கள் பகுதியின் வேட்பாளரான எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்