தேர்தலை புறக்கணிக்க போவதாக பேனர் வைத்த கிராம மக்கள்

தேர்தலை புறக்கணிக்க போவதாக பேனர் வைத்த கிராம மக்கள்
X
ராயக்கோட்டை அருகே தேர்தலை புறக்கணிக்க போவதாக பேனர் வைத்த கிராம மக்கள். அதிகாரிகள் நேரில் விசாரணை

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்டது தூருவாசனூர் கிராமம். இந்த கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லை.அடிப்படை வசதிகள் செய்து தரும் வரையில் எந்த அரசியல் கட்சியினரும் ஓட்டு கேட்டு வர வேண்டாம். 2021 தேர்தலை புறக்கணிக்கிறோம், இப்படிக்கு ஊர் பொதுமக்கள் என குறிப்பிட்டு பேனர் ஒன்று கிராம எல்லையில் வைக்கப்பட்டது இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் அங்கு சென்று விசாரணை நடத்திய ராயக்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலர்கள் கூறும்போது, ராயக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட தூருவாசனூர் கிராமத்தில் சாலை வசதி, மின் விளக்குகள் வசதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மோட்டார் பழுதானதால் தண்ணீர் வரவில்லை. இந்நிலையில் தான் அடிப்படை வசதிகள் இல்லை என கூறி தேர்தலை புறக்கணிக்க போவதாக பேனர் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஊர் பெரியவர்களிடம் பேசி வருகிறோம். மேலும் பழுதடைந்த மோட்டாரை சரி செய்து சீராக தண்ணீர் வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று கூறினர்.

Tags

Next Story