சூளகிரி அருகே கிணற்றில் விழுந்த நாய்: தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்பு

சூளகிரி அருகே கிணற்றில் விழுந்த நாய்: தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்பு
X

மீட்கப்பட்ட நாயுடன் தீயணைப்புப்படையினர்.

சூளகிரி அருகே வற்றிய கிணற்றில் விழுந்த நாயை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த ஏனுசோனை அருகே பீ.கொத்தப்பள்ளி கிராமத்தில் ராஜாமணி என்பவருக்கு சொந்தமான 30 அடி வற்றிய கிணற்றில் அப்பகுதியினரால் வளர்க்கப்படும் நாய் தவறி விழுந்தது.

இதனையடுத்து கிணற்றில் விழுந்த நாயை மீட்க கிருஷ்ணகிரி மாவட்டம் இராயக்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவம் இடத்திற்க்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி நாயை உயிருடன் பத்திரமாக மீட்டனர்.

நாயை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களை அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!