கிருஷ்ணகிரியில் மூலிகை செடிகள் மற்றும் விதைகள் பொதுமக்களுக்கு விநியோகம்

கிருஷ்ணகிரியில்  மூலிகை செடிகள் மற்றும் விதைகள் பொதுமக்களுக்கு விநியோகம்
X

 மேகலசின்னம்பள்ளி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவச மூலிகை செடிகள் வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் மேகலசின்னம்பள்ளியில் மூலிகை செடிகள் மற்றும் விதைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் மேகலசின்னம்பள்ளி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பொருட்டும், தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய திட்டமான மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த பொதுமக்களுக்கு மூலிகை செடிகள் மற்றும் விதைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான சுந்தரராஜன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.சுசித்ரா, உதவி சித்த மருத்துவர் டாக்டர்.பிரேமா, உதவி மருத்துவர் டாக்டர்.சுபஸ்ரீ, கண்காணிப்பாளர் வெங்கடாசலபதி, கண் மருத்துவ உதவியாளர் முருகேசன், மோகன், மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!