/* */

விளைபொருட்களை கொண்டு செல்ல சிறுபாலம் அமைக்க கோரிக்கை

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணையின் நீர்த்தேக்க பகுதியில், விவசாய விளைபொருட்களை கொண்டு செல்ல வசதியாக சிறுபாலம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

விளைபொருட்களை கொண்டு செல்ல   சிறுபாலம் அமைக்க கோரிக்கை
X

கே.ஆர்.பி.அணை நீர்த்தேக்க பகுதியில்  விவசாய விளைபொருட்களை கொண்டு செல்ல வசதியாக சிறுபாலம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கே.ஆர்.பி.அணை உள்ளது. இந்த அணையின் நீர்த்தேக்க பகுதியை சுற்றி பெத்ததாளப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட தாளாப்பள்ளி, தின்னகழனி, சின்னநாட்றம்பள்ளி, வட்டுகம்பட்டி, துறிஞ்சிப்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன.

அணை அதன் முழு கொள்ளளவை தண்ணீர் எட்டும் போது, மேற்குறிப்பிட்ட கிராமங்கள் வரை தண்ணீர் தேங்கி நிற்கிறது. அத்துடன் இந்த கிராமத்தை சேர்ந்த விவசாயிகளின் நிலங்களுக்கு செல்ல வேண்டும் என்றால், தாளாப்பள்ளி ஏரி மற்றும் கே.ஆர்.பி அணையை இணைக்கும் கால்வாய் செல்கிறது. அதிலும் தண்ணீர் தேங்கி நின்றுவிடுகிறது.

இதனால், இந்த கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு சொந்தமான சுமார் 300 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள விளைபொருட்களை, தங்கள் வீட்டிற்கு கொண்டு வர முடியாத நிலை ஏற்படுகிறது. அவ்வாறு கொண்டுவர வேண்டும் என்றால் சுமார் 5 கி.மீ தூரம் சுற்றி வர வேண்டும். இதனால் விவசாயத்திற்கு தேவையான இடுபொருட்களை எடுத்து செல்ல முடியாமலும், தங்கள் நிலத்தில் விளையும் விளைபொருட்களை எடுத்து வர முடியாமலும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகுகின்றனர்.

எனவே, மழை காலங்களிலும், கே.ஆர்.பி.அணை முழு கொள்ளளவை தண்ணீர் எட்டும் காலங்களிலும், விவசாயிகள் சிரமமின்றி சென்று வர ஏதுவாக, கே.ஆர்.பி அணை மற்றும் தாளாப்பள்ளி ஏரி கால்வாய்க்கு இடையே டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வரும் வகையில், சிறு பாலம் அமைத்து கொடுக்க உரிய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 1 July 2021 3:55 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  6. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  7. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
  9. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  10. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!