முதன்முறையாக நிரம்பிய சூளகிரி நீர்தேக்க அணை: கிராம மக்கள் பூஜை செய்து வழிபாடு

முதன்முறையாக நிரம்பிய சூளகிரி நீர்தேக்க அணை: கிராம மக்கள் பூஜை செய்து வழிபாடு
X

சூளகிரி அணையின் நீர் நிரம்பிய காட்சிகளை பொதுமக்களுடன் சேர்ந்து கே.பி.முனுசாமி பார்வையிட்டு, நிரம்பி செல்லும் நீரை மலர்தூவி வழிபட்டார்.

முதன்முறையாக நிறம்பிய சூளகிரி நீர்தேக்க அணையில் கிராம மக்கள் கிடா வெட்டி பூஜை செய்து வழிபாடு செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அடுத்த சூளகிரி சின்னாற்றின் குறுக்கே வேம்பள்ளி என்னுமிடத்தில் சூளகிரி நீர்தேக்க அமைந்துள்ளது. இந்த அணை 1986 இல் 95 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது.

கட்டிமுடிக்கப்பட்ட நாள் முதல் அணை இதுவரை முழுக்கொள்ளளவை எட்டாத நிலையில், ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையின் உபரிநீரை சூளகிரி அணைக்கு கொண்டுவர வேண்டுமென சுற்றுப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை பல கட்டங்களாக முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அணைக்கு நீர்க்கொண்டு செல்ல பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் முறையிட்டார். மேலும் நீர் செல்ல பட்டா நில உரிமையாளர்களிடம் கால்வாய் அமைக்க கோரிக்கை வைத்து மேற்கொண்ட முன்முயற்சி மேற்கொண்டார். இதைனயடுத்து அணை தற்போது முழுக்கொள்ளளவான 37 அடிகளில் 33 அடிகள் முதல்முறையாக நீர் நிரம்பி பெருக்கெடுத்துள்ளது.

100க்கும் மேற்ப்பட்ட கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, விவசாயம் செழிக்கும் என்பதால் அணை சுற்றுவட்டார கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று சூளகிரி அணையின் நீர் நிரம்பிய காட்சிகளை பொதுமக்களுடன் சேர்ந்து கே.பி.முனுசாமி பார்வையிட்டு, நிரம்பி செல்லும் நீரை மலர்தூவி வழிபட்டார்.

அணைக்கு நீர்வர காரணமான சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமிக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர். மேலும், கிடா வெட்டி அணைக்கு பூஜைகள் செய்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்