சூளகிரி பகுதி தேசிய நெடுஞ்சாலையில் போலீஸ் ஏஎஸ்பி., நேரில் ஆய்வு

சூளகிரி பகுதி தேசிய நெடுஞ்சாலையில் போலீஸ் ஏஎஸ்பி., நேரில் ஆய்வு
X

சூளகிரி பகுதி தேசிய நெடுஞ்சாலையில் ஆய்வு மேற்கொண்ட ஒசூர் உதவி காவல் கண்காணிப்பாளர் அரவிந்த்.

சூளகிரி பகுதி தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளால் உயிரிழப்புக்கள் ஏற்படுவதை தவிர்க்க ஏஎஸ்பி., நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியான மேலுமலை முதல் பேரண்டப்பள்ளி வனப்பகுதி வரை 35 கிமீ தூரமான தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் சாலை விபத்துக்களில் தமிழகத்திலேயே அதிகமான உயிரிழப்புகள் ஏற்படக்கூடிய பகுதியாக சூளகிரி இருந்து வருகிறது.

சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க, ஒசூர் உதவி காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையிலான போலிசார் சப்படி, அட்டகுறுக்கி, மேலுமலை ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு மேம்பாலம் அமைப்பதற்காக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைகளை மேற்கொண்டார்..

அப்போது மாவட்ட கூடுதல் எஸ்பி ராஜூ, சூளகிரி காவல் ஆய்வாளர் மனோகரன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

Tags

Next Story
ai in future agriculture