வேப்பனப்பள்ளி அருகே பள்ளத்தில் சிக்கிய ஆந்திர மாநில பேருந்து

வேப்பனப்பள்ளி அருகே பள்ளத்தில் சிக்கிய ஆந்திர மாநில பேருந்து
X
சாலையோர பள்ளத்தில் சிக்கிய ஆந்திர மாநில அரசுப்பேருந்து.
வேப்பனப்பள்ளி அருகே ஆந்திரமாநில பேருந்து சாலையோர பள்ளத்தில் சிக்கியது.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஆந்திர மாநிலம் குப்பம் என்ற நகரத்திற்கு 30 கற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆந்திர மாநில அரசு பேருந்து சென்றுக்கொண்டு இருந்தது.

அப்போது தமிழக எல்லையான அரியனப்பள்ளி அருகே வளைவில் சென்றபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரமாக இருந்த பள்ளத்தில் முன்பக்க சக்கரங்கள் இறங்கியது.

இந்த சம்பவத்தில் அதிஷ்டவசமாக எந்த பயணிகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்ப்படவில்லை. இந்த சம்பவம் குறித்து வேப்பனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி