வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதியில் 40 கிராமங்களில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்

வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதியில் 40 கிராமங்களில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்
X
வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் கே.பி.முனுசாமி 40 கிராமங்களில் தீவிரமாக பிரசாரம் செய்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமி எம்பி., சூளகிரி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

அலகுபாவி, அட்ரகானப்பள்ளி, மருதாண்டப்பள்ளி, வரதாபுரம், எலசேப்பள்ளி, புலியரசி, ஒட்டர்பாளையம், சூளகிரி, பெரியமேடுகானப்பள்ளி, பெல்லட்டி, நஞ்சனெட்டி, சாமனப்பள்ளி, கீரனப்பள்ளி, கணஜூர், யாகனப்பள்ளி, பாத்தகோட்டா, டி.குருபரப்பள்ளி,

தசவசானப்பள்ளி, உத்தனப்பள்ளி, கிருஷ்ணாபுரம், வாலிக்கல், கன்னசந்திரம், வெங்கடேசபுரம், அளேசீபம், பண்டேப்பள்ளி, கரடிகுட்டை, தியானதுர்க்கம், அனுமந்தீர்த்தம், ஓபேபாளையம், அகரம், இந்திரா நகர், பீர்ஜேப்பள்ளி, நாயக்கனப்பள்ளி, ராமாபுரம், கொம்மேப்பள்ளி, சானமாவு, உப்பரத்தம்மண்டரப்பள்ளி, பென்னிக்கல், கொத்தப்பள்ளி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரசாரம் செய்தார்.

அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். அப்போது பொதுமக்களிடையே பேசுகையில் தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அவர்கள் வழியில் தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் நல்லாட்சி நடந்து வருகிறது. அதிமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பயன் அடைந்துள்ளனர். இந்த ஆட்சி தொடர இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள்.

தற்போது தேர்தல் அறிக்கையில் 6 கியாஸ் சிலிண்டர்கள் வருவதாக அறிவித்துள்ளோம். இதனால் ஏழை, எளிய மக்கள் பயன் பெறுவார்கள். அதே போல வாஷிங் மெஷின் தருவதாகவும், கட்டணமில்லாத கேபிள் டி.வி. சேவை ஆகியவை அறிவித்துள்ளோம்.

இதே போல மேலும் எண்ணற்ற திட்டங்கள் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே வருகிற தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றி சின்னமான இரட்டை இலைக்கு மக்கள் வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார். இதில், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!