கிருஷ்ணகிரி அருகே 5 வாகனங்கள் மோதி விபத்து: அரசு பேருந்தில் 17 பயணிகள் காயம்
விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரிலிருந்து 70 பயணிகளுடன் அரசு விரைவுப்பேருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்துக்கொண்டிருந்தபோது தேசிய நெடுஞ்சாலை கோப்பசந்திரம் என்னுமிடத்தில் அதிக பாரம் ஏற்றிவந்த எம்சாண்ட் லாரி சாலையை கடக்க முயன்றது. அப்போது லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.
ஒசூரை நோக்கி பின்னால் வந்த லாரி கவிழ்ந்த லாரி மீது மோதாமல் இருக்க எதிர்திசைக்கு திருப்பியதில் அரசு பேருந்து மீது மோதியது. அரசு பேருந்து பின்னால் ஈச்சர் லாரி, கார் என அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
லாரி ஓட்டுநர் கவலைக்கிடமான நிலையிலும், அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர் உட்பட 17பேர் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அனுமதிக்கப்பட்டவர்களில் 7பேர் கை மற்றும் கால்கள் உடைந்தும் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்றும், 3பேர் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலையில் ஏற்ப்பட்ட விபத்தால் 2 மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மீட்பு பணியில் சூளகிரி போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
ஓசூர் மற்றும் சூளகிரி பகுதிகளில் அதிகப்படியான பாரம் ஏற்றி செல்வதும், அதிவேகமாக இயக்கப்படுவதுமென அவ்வபோது விபத்துகளுக்கான காரணம் என்றும் வருவாய்த்துறையினரின் அலட்சியத்தினாலே விபத்துகள் அதிகரிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu