சூளகிரி அருகே சுவா் இடிந்து விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழப்பு

சூளகிரி  அருகே சுவா் இடிந்து விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழப்பு
X

சிகரலப்பள்ளியில் இடிந்து விழுந்த வீட்டின் சுவர்.

சூளகிரி அருகே மழையின்போது வீட்டு சுவா் இடிந்து விழுந்ததில் 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த பேரிகை அருகே உள்ளது சிகரலப்பள்ளி கிராமம். இந்தக் கிராமத்தில் 76 பழங்குடியின குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

தொடா் மழை காரணமாக ஒரு வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் நந்தீஸ் என்னும் 3 வயது சிறுவன் உயிரிழந்தாா். உயிரிழந்த சிறுவனின் தாய் பூலட்சுமி, சகோதரி சுமித்ரா ஆகியோா் படுகாயங்களுடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதையடுத்து, பாதுகாப்பில்லாமல் குடிசை வீடுகளில் வசித்து வந்த 75 பழங்குடியின குடும்பங்களை அதிகாரிகள் வெளியேற்றி, அரசுப் பள்ளியில் தங்க வைத்துள்ளனா்.

இந்தச் சம்பவம் குறித்து பேரிகை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!