வெயிலின் தாக்கத்தை தணிக்க இளநீர், தர்பூசணி, முலாம்பழம் அமோக விற்பனை
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
வெயிலின் தாக்கத்தை தணிக்க இளநீர், தர்பூசணி, முலாம்பழம் போன்றவற்றை அதிகளவில் உட்கொள்ள துவங்கியுள்ளனர்.
அதன்படி ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து முலாம்பழத்தை வியாபாரிகள் மொத்தமாக வாங்கி, வேப்பனப்பள்ளி பகுதிகளில் சாலையோரம் குவித்து வைத்தும், தள்ளுவண்டி, சரக்கு வாகனங்களிலும் விற்பனை செய்து வருகின்றனர்.
வேப்பனப்பள்ளி சந்தையில், ஒரு கிலோ முலாம்பழம், 20 முதல் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மற்ற பழங்களைக் காட்டிலும், முலாம்பழம் விலை குறைவாக இருப்பதால், பொதுமக்கள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெயில் பொதுமக்களை வாட்டி வருவதால், வெப்பத்தை தணிக்க முலாம்பழம் வாங்கிச் செல்கின்றனர். தற்போது ஆந்திரா மாநிலத்தில் இருந்து முலாம்பழம் அதிக அளவில் விற்பனைக்கு வருகிறது. தினமும், 2 டன் முலாம்பழம் விற்பனையாகிறது என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu