பொதுமக்கள் விரும்பும் பத்துரூபாய் மருத்துவர்

பொதுமக்கள் விரும்பும் பத்துரூபாய் மருத்துவர்
X

கிருஷ்ணகிரியில் 10 ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கும் இளம் மருத்துவரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியை அடுத்த மஹாராஜகடை பகுதியை சேர்ந்தவர் லோகேஷ். மருத்துவம் படித்துள்ள இவர் கடந்த 8 ஆண்டுகளாக அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் வேப்பனஹள்ளியில் மருத்துவமனை ஒன்றை துவங்கி உள்ள டாக்டர் லோகேஷ் அனைத்து மக்களுக்கும் 10 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வருகிறார். கிராம புறங்களில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் விதமாக துவங்கி உள்ள இந்த மருத்துவமனையில் 10க்கும் மேற்பட்ட படுக்கைகள் அமைத்து நோயாளிகளுக்கு 10 ரூபாய்க்கு சிகிச்சை அளித்து வருகிறார்.

தனது சிறு வயதில் மருத்துவ செலவிற்கு பணம் இல்லாமல் தான் பட்ட சிரமத்தை மற்ற ஏழை மக்கள் அனுபவிக்க கூடாது என்ற நோக்கத்தில் இந்த மருத்துவமனையை துவங்கி உள்ளதாகவும் எந்த ஒரு மக்களும் பண பிரச்சனையால் சிகிச்சை பெறாமல் அவதிபடக்கூடாது என லோகேஷ் தெரிவித்தார்.நாள் ஒன்றுக்கு 150க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் லோகேஷ் நோயாளிகளுக்கு ஏற்றாற்போல் மருத்துவமனையை மேலும் விரிவாக்கம் செய்ய உள்ளதாகவும், 10ரூபாய் மட்டும் வசூல் செய்வதால் பொதுமக்கள் யாரும் பணத்தை காரணம் காட்டி உடல்நிலை பாதிப்புக்கான சிகிச்சையை ஒத்திவைக்க மாட்டார்கள் எனவும் அனைத்து மக்களும் மருத்துவ சிகிச்சையை சேவையாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதையே குறிக்கோளாக கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!