மூட்டுவலியால் பாதிக்கப்பட்ட பெண் தூக்கிட்டு தற்கொலை

மூட்டுவலியால் பாதிக்கப்பட்ட பெண் தூக்கிட்டு தற்கொலை
X
ஊத்தங்கரை அருகே மூட்டுவலியால் பாதிக்கப்பட்ட பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த இ.மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராணி இவர் கடந்த இரண்டு வருடங்களாக மூட்டு வலியால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு கிடந்துள்ளார்

இந்த நிலையில் இவர் ஊத்தங்கரை திருப்பத்தூர் கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணம் ஆகாததால் மனமுடைந்து காணப்பட்ட அவர் மாலை அனுமன் தீர்த்தம் பகுதியில் உள்ள ஒரு கடையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்

இதுகுறித்து அவரது மகன் சிவகுமார் கொடுத்த புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!