பாலேகுளி ஏரியிலிருந்து 28 ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு: விவசாயிகள் பங்கேற்பு
பாலேகுளி ஏரியில் இருந்து தண்ணீரை திறந்து விடும் விவசாயிகள் மற்றும் பொதுப்பணித்துறையினர்.
கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் கடந்த 12ம் தேதி 50 அடியை எட்டியது. வடகிழக்கு பருவமழை பெய்ய உள்ளதால், விரைவில் அணை முழு கொள்ளளவை எட்டும் நிலை உள்ளது. எனவே அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறப்பதற்கு முன்பு, கால்வாய் மூலம் ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்ப வேண்டும் என கே.ஆர்.பி., அணை உபரிநீர் நீடிப்பு இடதுபுற கால்வாய் பயன்பெறுவோர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இன்று பாலேகுளி முதல் சந்தூர் வரை உள்ள 28 ஏரிகளுக்கு, பாலேகுளி ஏரியில் இருந்து கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பாரூர் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் முருகேசன், சங்கத் தலைவர் சிவகுரு, விவசாயிகள் இளங்கோவன், ராமமூர்த்தி, தனவேல், சக்தி, பழனி, உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னாதாக 28 ஏரி கால்வாய்களை அந்தந்த பகுதி விவசாயிகள் தங்கள் சொந்த செலவில் தூர்வாரி சுத்தம் செய்தனர். மேலும் கடந்த 2013ம் ஆண்டு முதல் அணை கால்வாய் மூலம் இந்த 28 ஏரிகளுக்கு திறந்து விட்டபோதிலும், ஒரு ஆண்டு கூட 28 ஏரிகளும் முழுமையாக நிரம்பவில்லை. எனவே, ஏரி நிரம்பும் வகையில் கால்வாயை அகலமும், ஆழமும் படுத்தி கொடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu