அதிமுக வேட்பாளரை குத்தாட்டம் போட்டு வரவேற்ற மூதாட்டி

அதிமுக வேட்பாளரை குத்தாட்டம் போட்டு வரவேற்ற மூதாட்டி
X
குத்தாட்டம் போட்டு ஊத்தங்கரை தொகுதி அதிமுக வேட்பாளரை வரவேற்ற பள்ளத்தூர் மூதாட்டி

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் ஊத்தங்கரை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தமிழ்செல்வம் இன்று காலை பள்ளத்தூர் அத்திப்பாடி இளவம்பாடி ஆகிய பகுதிகளில் பிரச்சாரத்தை தொடங்கினார்.

பள்ளத்தூர் பகுதிகளில் வீடு வீடாக நடந்தே சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேளதாளங்கள் முழங்க அதிமுக வேட்பாளர் தமிழ் செல்வத்திற்கு வரவேற்பு அளிக்கும் வகையில் ரமணி என்ற பாட்டி குத்தாட்டம் போட்டு வேட்பாளரை வரவேற்றது வேட்பாளரையும் வாக்கு சேகரிக்க வந்தவர்களையும் கவர்ந்தது. பெண்கள் தங்களது ஆதரவை தெரிவிக்கும் வகையில் வேட்பாளர் தமிழ் செல்வத்திற்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!