ஊத்தங்கரை அருகே மின் வேலி அமைத்து மானை வேட்டையாடிய 2 பேர் கைது

ஊத்தங்கரை அருகே  மின் வேலி அமைத்து மானை வேட்டையாடிய 2 பேர் கைது
X

ஊத்தங்கரை அருகே மின்வேலி அமைத்து ஆண் புள்ளி மானை வேட்டையாடியதாக பிடிபட்ட இருவர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மின்வேலி அமைத்து மானை வேட்டையாடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயணி உத்தரவின்படி, கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலர் மகேந்திரன் மேற்பார்வையில், கல்லாவி பிரிவு வனவர் துரைக்கண்ணு தலைமையில், வனக்காப்பாளர்கள் அங்குரதன், மருகன், வனக்காவலர் பூபதி ஆகியோர் இன்று விடியற்காலை 6 மணிக்கு ஊத்தங்கரை அடுத்த நொச்சிப்பட்டி வனப்பகுதியில் உள்ள கல்லாவி காப்புக்காட்டில் வன விலக்கு வேட்டை தடுப்பு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பெரியபொம்பட்டி பவர்லைன் சரகத்தில், மின்வேலி அமைத்து ஆண் புள்ளி மான் ஒன்றை வேட்டையாடி, அதனை வெட்டி தோலை உரித்து கொண்டிருந்த இருவரை கையும், களவுமாக பிடித்தனர்.

பின்னர், அந்த புள்ளி மானின் மாமிசம் மற்றும் பிடிப்பட்ட ஊத்தங்கரை அருகே உள்ள பெரியபொம்பட்டி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளிகளான கார்த்திகேயன்(34), சரவணன்(27) ஆகியோருடன் கிருஷ்ணகிரி வனச்சரகர் அலுவலத்தில் ஆஜர்படுத்தினர்.

பின்னர் அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, அவர்களை வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் படி கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வன விலங்குகளை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம். அவ்வாறு வேட்டையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வன விலங்குகளை வேட்டையாடுபவர்கள் குறித்து வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தர வேண்டும் என வனச்சரகர் கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story