ஊத்தங்கரை அருகே சேற்றில் சிக்கிய லாரி: வாகன ஓட்டிகள் கடும் அவதி
ஊத்தங்கரை - திருவண்ணாமலை சாலையில் சேற்றில் சிக்கித்தவித்த லாரி.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை - திருவண்ணாமலை செல்லும் சாலையில் வேடியப்பன் கோயில் முன்பு சிறிய மழைக்கே இந்த தேசிய நெடுஞ்சாலை சேறும் சகதியுமாக மாறியது. இதில் அவ்வழியாக வந்த லாரி ஒன்று சேற்றில் சிக்கிக்கொண்டது. இதனால் அவ்வழியாக வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். உடனடியாக லாரியை அப்புறப்படுத்தி சாலையை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி முதல் திண்டிவனம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் ஊத்தங்கரையில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலை, ஊத்தங்கரை வேடியப்பன் கோயில் முதல் சென்னப்ப நாயக்கன் ஊர் வரை உள்ள சாலைகள் மிகவும் மோசமான நிலையில், சேறும் சகதியும் குண்டும் குழியுமாக உள்ளது.
இதனால் அடிக்கடி சாலை விபத்துக்கள் நடந்து வருகிறது. இரு சக்கர வாகன ஓட்டிகள் பலர் கீழே விழுந்து கை,கால் முறிவு ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் பைக்கில் செல்பவர்கள், குழி இருக்கும் இடம் தெரியாமல் கீழே விழுந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து புகார் அளித்தும் பயனில்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இச்சாலை வழியாக பெங்களுரு, திருவண்ணாமலை, விழுப்புரம், திண்டிவனம், பாண்டிச்சேரி உள்ளிட்ட முக்கிய நகர பகுதிகளுக்கு இரவும், பகலும் என ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் சென்று வருகின்றது. ஆகவே மாவட்ட ஆட்சியர் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊத்தங்கரை நகரப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu