கொட்டும் மழையில் இருளர் இன மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற அமைச்சர்

கொட்டும் மழையில் இருளர் இன மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற அமைச்சர்
X

தளபதி நகரிலுள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டு அறிந்த அமைச்சர் ஆர்.காந்தி.

கொட்டும் மழையிலும் இருளர் இன மக்களிடம் அமைச்சர் ஆர்.காந்தி கோரிக்கை மனுக்களை பெற்று பொதுமக்களுடன் உணவருத்தினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம் மூன்றாம் பட்டி ஊராட்சி தளபதி நகரில் வசிக்கும் இருளர் இனத்தைச் சேர்ந்த 300 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா, மின்சாரம், சாலை, குடிநீர் வசதி கடந்த 10 ஆண்டுகளாக கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர்.

இதையடுத்து தகவல் அறிந்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி இன்று தளபதி நகரிலுள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டு அறிந்தார்.

உடனடியாக 15 நபர்களுக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணைகளையும் 6 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார்.

தொடர்ந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் ஒரு வாரத்தில் மின்சார இணைப்பு வழங்குவதாகவும், பொதுமக்கள் வைத்த கோரிக்கைகள் படிப்படியாக ஆறு மாத காலத்தில் நிறைவேற்றித் தரப்படும் என உறுதியளித்தார்.

மேலும் மின்சாரத் துறை சார்பாக மின் இணைப்புகளும், வருவாய் துறை சார்பாக வீட்டுமனை பட்டாக்கள், ஊரக வளர்ச்சித் துறை சார்பாக வீடு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் தனிநபர் இல்ல கழிப்பறைகள், சாலை வசதிகள் உடனடியாக ஏற்படுத்தித் தரப்படும் என உத்தரவாதம் அளித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!