ஊத்தங்கரை ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம் -பக்தர்கள் தரிசனம்

ஊத்தங்கரை ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம் -பக்தர்கள் தரிசனம்
X

விமரிசையாக நடந்த ஊத்தங்கரை ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம்.

ஊத்தங்கரை ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருக்கோவில், மகா கும்பாபிஷேக விழா நடந்தது.

கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள, ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருக்கோவில், மகா கும்பாபிஷேக விழா நடந்தது. அதிகாலை 5 மணிக்கு, சுப்ரபாதம், நிர்மால்ய தரிசனம், அபிஷேகம் மலர் நைவேத்தியம், கணபதி ஹோமம், கலச அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து ஐயப்ப சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.

பகல் 12 மணிக்கு, மங்கள ஆரத்தி, அதனைத் தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை, சபரிமலை மேல்சாந்திகள், சசி நம்பூதிரி மற்றும் வாசுதேவன் நம்பூதிரி ஆகியோர் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊத்தங்கரை, ஸ்ரீ தர்ம சாஸ்தா அறக்கட்டளை நிர்வாகிகள் செய்தனர்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!