ஊத்தங்கரை அருகே 600 கேன் எரிசாராயம் பறிமுதல் - ஒருவர் கைது

ஊத்தங்கரை அருகே 600 கேன் எரிசாராயம்  பறிமுதல் - ஒருவர் கைது
X

எரி சாராயம் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட லாரி. 

ஊத்தங்கரை அருகே 600 கேன் எரிசாராயம் பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக ஒருவரை கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளி அருகே உள்ள பால மந்திர் தனியார் பள்ளி அருகே, விழுப்புரம் மத்திய புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் புயல் பாலச்சந்திரன் தலைமையிலான போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், பெங்களூரில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி சென்ற லாரியை தடுத்து நிறுத்தி பரிசோதனை மேற்கொண்டனர்.

இதில்ம் டாரஸ் லாரி முழுவதும் தனித்தனியாக பெட்டிகளில் பார்சல் செய்யப்பட்ட 35 லிட்டர் கேன் அளவு கொண்ட, சுமார் 600 கேன் எரிசாராயம் பிடிபட்டது. இதன் மொத்த அளவு சுமார் 20 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. மடக்கிப் பிடித்த மத்தியபிரதேச லாரியை காவல் நிலையம் கொண்டு வரப்பட்டு லாரி ஓட்டுநர் பாலேந்திரசிங் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story