விதை சட்டத்தை மீறிய உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிப்பு
பைல் படம்.
இதுகுறித்து தர்மபுரி, கிருஷ்ணகிரி விதை ஆய்வு துணை இயக்குநர் பச்சையப்பன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 997 விதை விற்பனையாளர்கள் மற்றும் நாற்றுப்பணைகள், விதை விற்பனை உரிமம் பெற்று விதைகள் மற்றும் நாற்றுகள் விற்பனை செய்கிறார்கள். தற்போது நல்ல மழை பெய்துள்ளதால் பருத்தி, நெல், காய்கறி விதைகள் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விதை விற்பனை நிலையங்கள் மற்றும் நாற்றுப்பண்ணைகள் விதை ஆய்வாளர்கள் 1541 ஆய்வுகள் மேற்கொண்ட, 1181 விதை மாதிரிகள் எடுக்கப்பட்டதில் 31 எண்கள் தரமற்றது என கண்டறிந்தனர். அவ்வாறு தரமற்ற விதைகளை விற்பனை செய்த விதை விற்பனை நிலையங்கள் மற்றும் விதை உற்பத்தியாளர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து தரமற்ற விதைகளை விற்பனை செய்த விற்பனையாளர்கள் மற்றும் விதை உற்பத்தியாளர்களுக்கு நீதிமன்றத்தால் ரூ.20 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, விதை உற்பத்தியாளர்கள் மற்றும் விதை விற்பனையாளர்கள் விதை சட்டம் 1966ன் படி, தரமற்ற விதை விற்றால் முதல் தண்டனையாக இருந்தால் ரூ.500 வீதமும், இரண்டு அல்லது இரண்டிற்கு மேல் இருந்தால் ரூ.1000 அல்லது 6 மாதம் கடுங்காவல் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனைக்கு உட்படுத்ததப்படுவார்கள். மேலும், விதை விற்பனையாளர்கள் மற்றும் நர்சரி உரிமம் இல்லாமல் விதைகள் மற்றும் நாற்றுகள் விற்பனை செய்வதும் கடும் குற்றமாகும். எனவே, விவசாயிகளுக்கு தரமான சான்று பெற்ற விதைகள் மற்றும் நாற்றுகள் விற்பனை செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் விதை ஆய்வு துணை இயக்குநர் பச்சையப்பன் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu