ஊத்தங்கரையில் 'ஜெய்பீம்' இயக்குநர் மீது பாட்டாளி மக்கள் கட்சி புகார்

ஊத்தங்கரையில் ஜெய்பீம் இயக்குநர் மீது பாட்டாளி மக்கள் கட்சி புகார்
X

ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் லட்சுமியிடம் புகார் அளித்த பாமக.வினர். 

ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாய மக்களை இழிவுபடுத்தியதாக ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடிகர் சூர்யா நடித்த 'ஜெய்பீம்' திரைப்படம் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில் தமிழகத்தின் மிகப்பெரிய சாதியான வன்னியர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டு, மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

எனவே இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள், நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா, படத்தின் இயக்குநர் ஞானவேல் ஆகியோர் மீது சாதி பிரிவினை ஏற்படுத்தும் வகையில் படம் எடுத்ததாக வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை காவல் நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் லட்சுமியிடம், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் மனு அளித்தார். உடன் நகர செயலாளர் மணிவண்ணன், நகர தலைவர் கோவிந்தன், முன்னாள் நகர செயலாளர் குமரேசன், மாவட்ட மாணவரணி செயலாளர் ஹரிதாஸ், முன்னாள் நகர தலைவர் கே .ஆர். கிருபாகரன் மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள். ஊத்தங்கரை நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!