பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

பழமையான  பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
X
1,500 ஆண்டுகள் பழமையானது

கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகே 1,500 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி அருகே சென்னானூரை சேர்ந்த பெருமாள், ராஜேஷ் ஆகியோரின் தகவலின் பேரில், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுத் தலைவர் நாராயணமூர்த்தி தலைமையில், சென்னானூர் அருகே உள்ள முருகன் என்பவரின் தோட்டத்துக்கு அருகில் பாறை குகையில் உள்ள ஓவியங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இவர்களுடன் கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், தொல்லியல் ஆய்வாளர் சதாநந்தகிருஷ்ணகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

இது குறித்து காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: இந்த ஓவியங்கள் 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்சாந்து ஓவியங்கள். இப்பாறை ஓவியத்தில் பல தொகுதிகள் உள்ளன. இதில் குறியீடுகளும், மனித உருவங்களும் அடங்கும். நடுவில் உள்ள ஓவியத்தொகுதியில் பெண் நேராகவும், அவளுக்கு இருபுறமும் இரண்டு ஆண்கள் தலைகீழாகவும் காட்டப்பட்டுள்ளனர். மனித உருவம், வாள் மற்றும் அருகில் 2 நாய்கள் போன்ற விலங்குகளின் உருவங்கள் அருகில் காட்டப்பட்டுள்ளன. இதைத் தவிர முக்கோணம், சூலம் போன்ற குறியீடுகளும் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், பிரகாஷ், விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story