ஊத்தங்கரை அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து 23 பேருந்துகள் இயக்கம்
ஊத்தங்கரை பேருந்து டெப்போ.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து 23 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இது குறித்து ஊத்தங்கரை டெப்போ மேலாளர் கூறியுள்ளதாவது,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து ஊரடங்கு உத்தரவு தளர்வு அறிவிக்கப்பட்டதை அடுத்து இரண்டாம் வகை மாவட்டமாக கருதப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை பணிமனையில் இருந்து 23 பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதில் 17வெளிமாவட்டம் செல்லும் பேருந்துகளும், 6 நகரப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
குறிப்பாக ஊத்தங்கரை பகுதியில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் திருவண்ணாமலை மாவட்டம், திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் தர்மபுரி மாவட்டத்திற்கு மட்டுமே இயக்கப்படும். கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான ஓசூர் பகுதிக்கு ஊத்தங்கரை அரசு போக்குவரத்து பணிமனை பேருந்துகள் செல்ல டோல்கேட் பணம் கட்டாத காரணத்தினால் ஊத்தங்கரை பேருந்தில் பயணிக்கும் பயணிகளை கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி உடன் இறக்கிப் மாற்று வண்டியில் ஓசூர் செல்லும் பேருந்தில் அனுப்பி வைக்கப்படுவார்கள். இவ்வாறு ஊத்தங்கரை பணி மேலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஊத்தங்கரை பகுதியில் அதிக அளவில் தனியார் பேருந்துகள் இன்று இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu