கிருஷ்ணகிரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்

கிருஷ்ணகிரி - திண்டிவனம்  தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்
X

பணிகள் தீவிரமடைந்துள்ள கிருஷ்ணகிரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை.

கிருஷ்ணகிரி- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

கிருஷ்ணகிரியில் இருந்து ஊத்தங்கரை, செங்கம், திருவண்ணாமலை வழியாக திண்டிவனம் வரையிலான 180 கி.மீ நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலையை (என்.எச்.66) இருவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் திட்டம் கடந்த 2010-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஒப்பந்தம் எடுத்தவர்களுக்கு மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் பணிகள் பாதிக்கப்பட்டது. மத்திய அரசு மாற்றத்தால் பணிகள் கிடப்பில் போடப்பட்டது.

இதையடுத்து குண்டும், குழியும், புழுதியான இச்சாலையில் மக்கள், வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களுடன் சென்று வருகின்றனர். கிருஷ்ணகிரி முதல் சிங்காரப்பேட்டை வரை உள்ள சாலைகள் தற்காலிகமாக சீரமைத்தும், மழைக்காலங்களில் மீண்டும் குண்டும், குழியுமாக மாறிவிடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பலர் இச்சாலையை 11 ஆண்டுகளாக புறக்கணித்து மாற்றுச்சாலையில் பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில், இச்சாலை விரிவாக்க பணிகள் இரண்டாக பிரித்து மேற்கொள்ள வேண்டும் என கடந்த ஜனவரி மாதம் கிருஷ்ணகிரி எம்பி செல்லகுமார் கோரிக்கை விடுத்தார். அதன்படி பணிகள் மேற்கொண்ட வந்த நிலையில், கொரோனா ஊராடங்கால் சாலை அமைக்கும் பணிகள் மீண்டும் பாதிக்கப்பட்டது. கடந்த ஒரு மாதமாக சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக வாகன ஓட்டிகள் சிலர் கூறும்போது, கிருஷ்ணகிரி- திருவண்ணாமலை சாலை விரிவாக்கம் செய்து, சாலை அமைக்கும் பணிகள் தொய்வின்றி தற்போது நடைபெற்று வருகிறது. இப்பணிகள் விரைந்து முடிக்க வேண்டும். இதன் மூலம் 11 ஆண்டுகளாக அவதியுற்று வரும் வாகன ஓட்டிகளும், அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் பயன்பெறுவார்கள் என்றனர்.

Tags

Next Story