உயிருக்கு போராடிய மூதாட்டி: கையால் சுமந்து வாகனத்தில் ஏற்றிச்சென்ற எஸ்ஐ

உயிருக்கு போராடிய மூதாட்டி: கையால் சுமந்து வாகனத்தில் ஏற்றிச்சென்ற எஸ்ஐ
X

காக்கிக்குள்ளும் ஈரம் உண்டு : ஆம்புலன்ஸ் கிடைக்காததால், உயிருக்கு போராடிய மூதாட்டியை,  ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் தனது கையால் சுமந்து சென்று வாகனத்தில் ஏற்றி சிகிச்சைக்கு சேர்த்தார்.

உயிருக்கு போராடிய மூதாட்டியை, ஆம்புலன்ஸ் இல்லாததால், எஸ்ஐ தானேசுமந்து சென்று வாகனத்தில் ஏற்றி சிகிச்சைக்கு சேர்த்தார்.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி பகுதியில் வசித்து வரும் 88 வயதான சரஸ்வதி என்ற மூதாட்டி , ஓய்வூதியம் பெற்றுக் கொண்டு, ஊத்தங்கரையில் இருந்து மீண்டும் கல்லாவிக்கு உறவினரின் வாகனத்தில் டூவிலரின் அமர்ந்து வந்து கொண்டிருந்தார். குண்டும் குழியுமான ரோட்டில், டூவீலர் தடுமாறியதில், மூதாட்டி கீழே விழுந்த பலத்த காயமடைந்தார்.

அருகில் இருந்தவர்கள், ஆம்புலன்சுக்கு போன் செய்து காத்திருந்தனர். இதனிடையே அவ்வழியாக வந்த ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் லட்சுமி, இதை அறிந்தது, உடனடியாக மூதாட்டியை தன்னுடைய வாகனத்தில் தூக்கிச் சென்று, ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அரசு மருத்துவமனையில் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல், காவல் ஆய்வாளர் லட்சுமியே மூதாட்டியை கையால் தூக்கிச் சென்று, மருத்துவமனைக்குள் கொண்டு சென்று, சிகிச்சைக்கு அனுமதித்தார். பின்னர், மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு, மூதாட்டி அனுப்பி வைக்கப்பட்டார். மூதாட்டியை தானே சுமந்து சென்று வாகனத்தில் ஏற்றி கொண்டு மருத்துவமனையில் அனுமதித்த ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் லட்சுமியில் செயலையும், மனிதாபிமானத்தையும் பொதுமக்களும், மருத்துவர்களும் பாராட்டினர்.

Tags

Next Story
why is ai important to the future