திம்மாபுரம் அரசு தோட்டக்கலை பண்ணையில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் ஆய்வு
திம்மாபுரம் அரசு தோட்டக்கலை பண்ணையில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் சமயமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணம் அருகே உள்ள திம்மாபுரம் அரசு தோட்டக்கலை பண்ணையை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில், வேளாண்மை உற்பத்தி ஆணையர் சமயமூர்த்தி ஆய்வு செய்தார். அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த தோட்டக்கலை சார்ந்த கண்காட்சியை பார்வையிட்டார்.
மேலும் தோட்டக்கலை பண்ணையில் செடிகள் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது என ஆய்வு மேற்கொண்டனர். அரசு தோட்டக்கலை பண்ணையில் உள்ள மா இரகங்கள் மற்றும் மா நாற்றுகள் அமைந்த வயல்களை ஆய்வு மேற்கொண்டனர். சுமார் 70 வருடங்கள் பழமை வாய்ந்த இந்த பண்ணையில் 36 மா ரகங்கள் பராமரிக்கப்படுகிறது என்றும், மேலும் இந்தியா மற்றும் உலக நாடுகளில் உள்ள சிறந்த ரகங்கள் பெறப்பட்டும் பராமரித்து மா செடிகள் தரமான முறையில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கிடவும், இந்கு பல வகையான அலங்கார செடிகள், பூச்செடிகள் மற்றும் பழ செடிகள் உரிய காலத்தில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கிட அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையர் வள்ளலார், வேளாண்மைத்துறை இயக்குனர் அண்ணாதுரை, தோட்டக்கலைத்துறை இயக்குனர் பிருந்தாதேவி, தோட்டக்கலை இணை இயக்குனர் உமாராணி, துணை இயக்குனர் ராம்பிரசாத் மற்றும் அனைத்து நிலைய தோட்டக்கலை துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu